Sunday, November 8, 2015

Deepavali Marundu / தீபாவளி மருந்து recipe

தீபாவளி மருந்து/லேகியம்:

தேவையான பொருள்கள்:

பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்

வறுத்துப் பொடிக்க:

அரிசித் திப்பிலி – 100 கிராம்
கண்டத்திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
கிராம்பு – 5
(நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்)


செய்முறை:

வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருள்களையும் தனித்தனியாக, குறைந்த தீயில், நிதானமாக, பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.)

வறுக்கவும்.  எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.

வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெடாது.

மருந்து பக்குவமாக வர, வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில் வைத்துக் காய்ச்சக் கூடாது.

தீபாவளி மருந்து/லேகியம்
தீபாவளி மருந்து/லேகியம்
நாட்டுமருந்து
நாட்டுமருந்து




கண்டத்திப்பிலி
கண்டத்திப்பிலி
அரிசித் திப்பிலி
அரிசித் திப்பிலி
                                       


பரங்கிச் சக்கை
பரங்கிச் சக்கை
சித்தரத்தை
சித்தரத்தை 
ஓமம்
ஓமம்
ஜாதிபத்திரி
ஜாதிபத்திரி 
சுக்கு
சுக்கு
பனைவெல்லம்
பனைவெல்லம் 

cookingly yours
ram

No comments:

Post a Comment